கிறிஸ்தவ பெண்ணுக்கு மரண தண்டனை ரத்து : பாகிஸ்தானில் வன்முறை

பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவப் பெண்ணான ஆசியா பீவி என்பவருக்கு வழங்கிய மரண தண்டனையை ரத்து செய்ததால் பாகிஸ்தானின் மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

Update: 2018-11-02 09:05 GMT
பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவப் பெண்ணான ஆசியா பீவி என்பவர், இஸ்லாம் மதத்தை தரக்குறைவாக பேசியதாக கூறி அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 8 ஆன்டுகளாக சிறையில் இருந்த அவரின் மரண தண்டனையை ரத்து செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானின் மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. 
Tags:    

மேலும் செய்திகள்