இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக்சேவிற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து எம்.பி.க்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-28 06:00 GMT
இலங்கையில் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றதையடுத்து பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான், ஈ.பி.டி.பி கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இலங்கை அரசின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக்சேவிற்கு ஒத்துழைப்பு வழங்க  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அனைத்து எம்.பி.க்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்