2,000 ஏக்கரில் நடைபெறும் விவசாயம் - 10 ஏக்கருக்கு கூட பயன்படாத பாசன நீர் - விவசாயிகள் வைத்த கோரிக்கை

Update: 2024-05-05 17:05 GMT

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பாசனத்திற்கு போதிய அளவு நீரை என்.எல்.சி நிர்வாகம் வெளியேற்றாததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.

மதுவானைமேடு கிராமப் பகுதியில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது, இந்த பாசனத்திற்கு வழங்கப்படுவது, வழக்கம். தற்போது வெளியேற்றப்படும் நீரானது, 10 ஏக்கர் நிலத்திற்கு கூட பயன்படாது என கூறி, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நீரை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், கிராமத்தின் பெரிய ஏரியை தூர்வாரி தர வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்