செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்,ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்டதின் காரணமாக, உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.இவரது மனைவி மீனாட்சி, பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தையலிடப்பட்ட இடத்தில் கிருமி தொற்று இருப்பதாக கூறி தொடர்ச்சியாக ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாததின் காரணமாக, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.