பயங்கர வெடி சத்தம்.. குலுங்கிய திண்டுக்கல்.. நில அதிர்வால் பீதியில் மக்கள்
திண்டுக்கல்லில், பயங்கர வெடி சத்தத்துடன், நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளான ஆத்தூர், சின்னாளப்பட்டி, நத்தம், வேடசந்தூர் பகுதிகளில் இதனை பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர். கல்குவாரிகளில் இருந்து வெடி சத்தம் ஏற்படுகிறதா? அல்லது போர்வெல் அமைப்பதற்காக பாறைகள் தகர்க்க வெடிவைக்கப்படுகிறதா? என்று குழம்பியுள்ள மக்கள், பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர
தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.