மேம்பாலத்தில் சென்ற காரில் திடீர் தீ விபத்து - உயிர்சேதம் இல்லை

திண்டுக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேம்பாலத்தில் சென்ற காரில் திடீர் தீ விபத்து - உயிர்சேதம் இல்லை
Published on

திண்டுக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர் வில்ஃப்ரெட் ஜோ. இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூருவில் இருந்து மார்த்தாண்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென கார் என்ஜினில் தீப்பற்றி, மளமளவென பரவியது. தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com