"'மதுரையில்.." - தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-04-25 14:14 GMT

மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது...

மதுரையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து, நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மதுரை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது, மதுரை மாநகராட்சியில் எத்தனை கால்நடை மருத்துவர்கள் இருக்கிறார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மாநகராட்சி தரப்பில் இரண்டு கால்நடை மருத்துவர்கள் இருப்பதாக வழக்கறிஞர் கூறியதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சியில் கூடுதல் கால்நடை மருத்துவர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்