அதிகரிக்கும் கொரோனா.... புதிய கட்டுப்பாடுகள்?... முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2022-01-09 20:56 GMT
தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து உள்ளது. 

இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நண்பகல் 12 மணியளவில், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, சனிக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது,...

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்து சேவையை தடை செய்வது, ஐ.டி.ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துவது,... 

சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிப்பது உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு  மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்