சென்னையில் விமான சேவை தாமதம் - பயணிகள் தவிப்பு

Update: 2024-05-04 07:39 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு லண்டன் விமானம் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்தே தாமதமாகத் தான் புறப்பட்டது... இதுகுறித்த தகவல் கிடைக்காத பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்துக் கிடந்தனர். இதையடுத்து அவர்களுக்கு விமான நிறுவனம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. அதிகாலை மூன்றரை மணிக்கு வர வேண்டிய விமானம் ஒன்பதரை மணிக்கு வந்தது. நிலையில், மீண்டும் பதினொன்றரை மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், லண்டனில் இருந்து சென்னை வந்த பயணிகள் மற்றும், சென்னையில் இருந்து லண்டன் செல்லும் 600க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்