பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-27 10:47 GMT
பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. இவர் தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த பெண் காவலர் உடனடியாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையிலான போலீசார் கீரனூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். 

மேலும் புகார் அளித்த பெண் காவலரிடம் அவர்கள் வாக்குமூலமும் பெற்றனர். அப்போது, வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறியுள்ளார். 

இதன்பேரில் வீரகாந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் உடனடியாக திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி பிறப்பித்தார். 

ஏற்கனவே பெண் ஐபிஎஸ் விவகாரம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் இப்போது பழனி அருகே காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் விவகாரத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்