ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா - சசிகலாவுக்கு பாதுகாப்பு வழங்ககோரி மனு

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலாவிற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-14 06:31 GMT
ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலாவிற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா விடுதலையானவுடன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர்அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா,  தொண்டர்களிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் வரும் 17ம் தேதி அதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சசிகலா வரும் 16 ஆம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அப்போது சசிகலாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்ககோரி, முன்னாள் தென் சென்னை மாவட்ட கழக இணை செயலாளர் வைத்தியநாதன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். வருகிற 17 ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கும், சசிகலா செல்ல உள்ளதால் தி.நகர் துணை ஆணையரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்