2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்-ஏற்பாடுகள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு தேவையான விரல் மை உள்ளிட்ட 72 பொருட்கள் அனைத்தும் 6,652 வாக்கு பதிவு மையத்திற்கு அனுப்பபட்டன.

Update: 2021-10-08 16:18 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு தேவையான விரல் மை உள்ளிட்ட 72 பொருட்கள் அனைத்தும் 6,652 வாக்கு பதிவு மையத்திற்கு அனுப்பபட்டன.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், இதர மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தலும் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் வாக்குச் சாவடிக்கு தேவையான விரல் மை உள்ளிட்ட 72 வகை பொருட்கள் அனுப்பட்டுள்ளன. 

மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளை web streaming வழியாக கண்கானிக்கவும், 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தி கண்கானிக்கவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

வாக்குப்பதிவு அலுவலர் உட்பட தேர்தல் பணியாளர்களுக்கு பணி ஆணையும், வேட்பாளர்கள் மற்றும்  ஏஜென்டுகளுக்கு நுழைவு சீட்டும் வழங்கப்பட்டுள்ளன. 

வாக்காளர்கள் , வேட்பாளர்கள் , முகவர்கள் தவிர வேறு யாரும் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி இல்லை என மாநில தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்