மண் சரிவில் சிக்கிய இளைஞர் - 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கட்டுமான பணியின் போது மண் சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த நபர் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். இது குறித்து விரிவாக பார்ப்போம்...

Update: 2021-07-21 06:14 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது கரைசுத்து உவரி கிராமம். இங்கு ஜெயக்குமார் என்பவர் புதிதாக வீடு கட்டி வந்தார். கட்டுமான பணிகளுக்காக நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கிராமத்தில் இருந்து 15 பேர் கரைசுத்து உவரிக்கு வந்து தங்கி வேலை பார்த்தனர்.செவ்வாயன்று காலை 8.30 மணிக்கு பிரவீன் என்பவர் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்கான கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கல்பதிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட, கழுத்து வரை மண்ணில் புதைந்தார் பிரவீன்..அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் விரைந்து சென்று முயற்சி செய்தும் மீட்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இளைஞரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியை வெட்டி அவரை சுற்றி புதைத்தனர்..பின்னர் ஜேசிபியில் கயிறு கட்டி இழுக்க முயன்றும், அவர் கால் மண்ணில் சிக்கியிருந்ததால் வலியில் அலறினார். இருப்பினும் பொறுமையை இழக்காத தீயணைப்பு வீரர்கள், பிரவீனுக்கு தைரியம் கூறியும், மயக்கமடையாமல் இருப்பதற்காக நீர் ஆதாரங்களையும் வழங்கினர்.இதனையடுத்து பிரவீனை சுற்றி சென்ட்ரிங் செட்டப்பை அமைத்த மீட்பு படையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரை பத்திரமாக மீட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞரை பத்திரமாக மீட்ட மீட்பு படையினரை தீயணைப்புத்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்..
தீயணைப்பு துறையினரின் விடாமுயற்சியும், இளைஞரின் தன்னம்பிக்கையும் எந்தவித காயங்களுமின்றி அவரை உயிர் பிழைக்க வைத்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்