மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம் - வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

அதிமுக அவைத்தலைவர் மசூதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-19 17:33 GMT
அதிமுக அவைத்தலைவர் மசூதனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மதுசூதனனுக்கு, நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்​ செல்வம் நேரில் சென்று பார்த்தார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்