280 கிடா..7000 ஆண்கள் ஊரையே புரட்டிப்போட்ட...கறிகுழம்பு வாசம் இன்னைக்கு ஒரு புடி

Update: 2024-04-27 07:36 GMT

விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் மடையே திருமலை கிராம மக்களின் கருப்பண சாமி... ஆண்டுதோறும் மடைக்கு கிடா வெட்டி திருவிழா நடத்துவது வழக்கம்... அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மக்கள் நேர்த்திக் கடனாக கருப்பு ஆட்டை மடைக் கருப்பண சாமிக்குக் காணிக்கையாக்க... இந்த முறை 280 கருப்பு ஆடுகள் சாமிக்குப் படைக்கப்பட்டன... தொடர்ந்து கிடா வெட்டி... சுடச்சுட பச்சரிசி சாதம்... மணக்க மணக்க கறிக்குழம்பு... ரசம் விருந்துக்குத் தயாரானது... 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் விருந்தில் பங்கேற்று ரசித்து ருசித்து வயிறார சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்