தடுப்பூசி - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2021-04-26 16:12 GMT
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விலையை நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகள் நிதி சுமையில் இருக்கும் போது, தடுப்பூசிக்கு மாறுபட்ட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது நியாயமற்றது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கையில் தடுப்பூசி போட 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட போது, அனைவருக்கும் மத்திய அரசுதான் தடுப்பூசி வழங்கும் என கருதியதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து வயதினருக்கும் தேவையான தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இனிவரும் நாட்களில் தடையின்றி தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக வெளிநாட்டு தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்ய வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்