CSKvsSRH சென்னை அபார வெற்றி

Update: 2024-04-29 01:51 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், கேப்டன் ருதுராஜ் 98 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 52 ரன்களும், ஷிவம் துபே 39 ரன்களும் குவித்து பக்கபலமாக இருந்ததால், மூன்று விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் என்ற இலக்குடன் கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். 18 புள்ளி ஐந்து ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணி 134 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்