இன்று புறப்படும் முதல்வர்.. கொடைக்கானலில் போலீஸ் பலத்த பாதுகாப்பு

Update: 2024-04-29 02:00 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்குள்ள விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஒய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வரும்

மே 4 ந்தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் பலப்படுத்தியுள்ளனர்.

கொடைக்கானல் பகுதிகளில் இன்று முதல் வரும் 4 ந்தேதி வரை டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்