துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-01-16 10:05 GMT
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அதிகாலை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்