திடீரென கடைக்குள் புகுந்த திருடன்...அடித்து துவைத்து அனுப்பிய பெண்கள் - வைரலான வீடியோ காட்சிகள்

Update: 2024-04-29 11:48 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தின்பண்ட கடையில் புகுந்து திருட முயன்ற நபரை, பெண் ஊழியர்கள் அடித்து விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றோரு கடைக்கு சென்றிருந்த நிலையில், அதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்மநபர், கடைக்குள் புகுந்து கடையில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது கடைக்குள் வந்த பெண் ஊழியர்கள் திருட வந்த மர்மநபரை அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்