ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி எவ்வளவு? - விவரங்களை கேட்டு தீபக் வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-01-05 03:42 GMT
இது தொடர்பாக, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்து வரி பாக்கி விவரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அணுக வேண்டுமே தவிர, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் வருமான வரித் துறை உள்ளிட்ட அனைவரையும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, குறைந்தபட்சம் மனுதாரர் யாரை அணுகவேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி,  விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்