மொழி விவகாரம் - நீதிபதி கருத்து

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

Update: 2020-09-19 14:09 GMT
மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என்று,  உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். 
 
இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மதவாத மற்றும் பயங்கரவாத சக்திகளை திடமாக எதிர்க்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு விடுதலை, தமிழ்மொழி முழக்கங்களை எழுப்பி, சில அரசியல் கட்சிகள் மாநிலத்தில் அசாதாரண நிலையை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருவதாக, கூறினார்.

மொழி பேரினவாதத்திற்கு இடம் தரக்கூடாது என்றும், இதுபோன்று சக்திகள் தலையெடுக்க அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

மொழிகள் தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடாது எனவும் நீதிபதி கிருபாகரன் கூறினார்.

கிருபாகரன் கருத்தை ஏற்க மறுத்த மற்றொரு நீதிபதி ஹேமலதா ஒரு மொழியை படிக்க வேண்டும் என்பது தனி நபர்களின் விருப்பம் என மாற்றுக் கருத்து கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்