பெரியார் சிலை அவமதித்த விவகாரம் : "சரணடைந்தவருக்கு 2 நாள் போலீஸ் காவல்" - கோவை நீதிமன்றம் உத்தரவு

பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரத்தில், சரணடைந்த நபரை இரண்டு நாள் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-07-23 12:21 GMT
கோவை சுந்தராபுரத்தில், கடந்த ஆறு தினங்களுக்கு, முன் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், 153, 153ஏ, 504 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பொறுப்பேற்று போத்தனூர் காவல்நிலையத்தில் 21 வயது இளைஞர் அருண் கிருஷ்ணன் சரணடைந்தார். கந்த சஷ்டி கவச சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெரியார் சிலையை அவமதித்ததாக, அந்த நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த இளைஞர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அருண் கிருஷ்ணனை இரண்டு நாள் காவலில் விசாரிக்க குனியமுத்தூர் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்