திமுக எம்எல்ஏவின், மனைவி, மகன்களுக்கு கொரோனா

ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனின் மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-30 02:35 GMT
ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனின் மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 தினங்களுக்கு முன்பு  அவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அதில் அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நோய்தொற்று ஏற்பட்டுள்ள போதிலும், தங்கபாண்டியன் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்