தனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணம் குறைப்பு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தனியார் மருத்துவமனைகளில் கொரனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் PCR சோதனைக்கான கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2020-06-07 02:12 GMT
தனியார் மருத்துவமனைகளில் கொரனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் PCR சோதனைக்கான கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ஐ.சி.எம்.ஆர், அதிகபட்சமாக 4 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கலாம் என தெரிவித்திருந்த நிலையில், பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை குறைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருந்து PCR சோதனை செய்தால், 2500 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும்,  வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக 500 வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு அதிகபட்சமாக 3ஆயிரம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்