3 ஆண்டுகளில்.. புதிய சாதனை - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Update: 2024-05-04 11:18 GMT

திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 3 ஆண்டுகளில் அரசு அளித்து வரும் ஊக்கம் காரணமாக 2021ல் 2 ஆயிரத்து 105ஆக மட்டுமே இருந்த புத்தொழில் நிறுவனங்கள், கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 115ஆக உயர்ந்துள்ளதாகவும், 18 மகளிர் சுய உதவிக் குழுக்கள் புத்தாக்கத் தொழில் கூடங்களாக மாறியுள்ளதாகவும், 25 மகளிர் தொழில் முகவர்கள் புத்தாக்கத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது... தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் துறை நிதியுதவியால் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்கள் மூலம் 150 வேலைவாய்ப்புகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 913 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... டான்சீட் நிதியுதவியில் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்களில் 314 கோடியே 30 லட்ச ரூபாய் முதலீடுகள் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாக்கத் தொழில்களுக்கான போர்ட்டல் ஏற்படுத்தப்பட்டது முதல் 78 புத்தாக்கத் தொழில்கள் இதில் இணைந்துள்ளதாகவும், இப்படிப் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் மாபெரும் சாதனைகள் படைத்து வருகிறார் என பலரும் பாராட்டுவதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்