விமானங்கள் இயக்கப்படுவதற்கான வழிகாட்டுதல் - தமிழக அரசு வெளியீடு

விமானங்கள் இயக்கப்படுவதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2020-06-02 10:36 GMT
விமானங்கள் இயக்கப்படுவதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசி ஆர் சோதனை கண்டிப்பாக எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சோதனையில் கொரோன உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என்றும்,  இல்லையென்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் அறிகுறி இருப்பின் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ பாஸ் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்றும் தொழில் சம்பந்தமாக விமானம் பயணம் மேற்கொள்வோர், 48 மணி நேரத்தில் திரும்பி வருவோருக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு விடுத் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் அழியாத மை - யால் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும் என்றும் தமிழக அரசு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்