"பொய்யான தகவலால் குடும்பத்தில் சல சலப்பு, சச்சரவு" - கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Update: 2020-05-22 03:01 GMT
மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வரும் இவரது செல்போனை அவரின் மனைவி சோதனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது தன் கணவர் எங்கெல்லாம் சென்று வந்தார் என்பதை கண்டறிய கூகுள் மேப்பில் டைம்லைனை பார்ப்பது இவரின் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் சந்திரசேகரின் செல்லாத இடங்களை கூட கூகுள் மேப் டைம்லைனில் காட்டியதாக கூறப்பட்ட நிலையில் இதனால் கணவன்- மனைவிக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. பல கட்ட சமாதான பேச்சுகளும் தோல்வியில் தான் முடிந்தன. கூகுளை நம்பிய தன் மனைவி தன்னை நம்பாததால் விரக்தியடைந்தார் சந்திரசேகரன். இதையடுத்து பொய்யான தகவல்களை கொடுத்து தன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு கோரியும் அவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

\
Tags:    

மேலும் செய்திகள்