"குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் பெறப்பட்டுள்ளது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஊரடங்கின் போது நடந்த குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-20 14:27 GMT
ஊரடங்கின் போது, நடந்த குடும்ப வன்முறை தொடர்பாக, 616 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஊரடங்கின் போது, குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுதா ராமலிங்கம் என்பவர், உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடர்ந்தார். அப்போது தமிழக அரசுத் தாக்கல் செய்த அறிக்கையில், குடும்ப வன்முறை புகார்கள் தொடர்பாக, மாவட்டம்தோறும் சமூகநலத்துறை  அறிக்கை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 616 புகார்கள் வந்துள்ளதாகவும்,   பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக கவுன்சிலிங்  வழங்கப்படுகிறது என்றும் அரசு தெரிவித்தது.
Tags:    

மேலும் செய்திகள்