"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு-அவசரம் வேண்டாம்" - பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-05-18 10:21 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், அரசின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையை காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு தேர்வு நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்தினால், மாணவர்கள் மன-உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்