மரங்களை வெட்ட தடை விதிக்க கோரி வழக்கு : 2 மனுதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

மரங்களை வெட்ட தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்த 2 பேருக்கு தலா10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-20 12:36 GMT
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா மற்றும் சின்னதங்கம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் மயிலாடும்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் நன்கு வளர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் அந்த தடையை விலக்கி இறுதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை 
இந்த வழக்கில் பொது நலன் இருப்பதாக தெரியவில்லை என்று என்று தெரிவித்து மனுத்தாக்கல் செய்த இருவருக்கும் அபராதம் விதித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்