தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது - ஒரு சவரன் தங்கம் ரூ.31,288க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 288 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Update: 2020-02-17 07:29 GMT
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை, இன்று கிராமுக்கு 13 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் 30 ஆயிரத்து 900 ஆக இருந்த தங்கம் விலை, கடந்த சனிக்கிழமை 31 ஆயிரத்து 392 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை திடீரென சவரனுக்கு 104 ரூபாய் குறைந்துள்ளது.ஒரு கிராம் 3 ஆயிரத்து 911 ரூபாய்க்கு விற்பனையானது. கோரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீன வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பதால், ஆபரண தங்கம் விலை தொடர்ந்து உயர  வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்