EDயை அதிரவிட்ட அங்கித் திவாரி வழக்கு.. நாள் குறித்த உச்ச நீதிமன்றம்

Update: 2024-04-29 12:05 GMT

லஞ்ச வழக்கில் ஜாமீன் கோரிய அங்கித் திவாரியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. அங்கித் திவாரி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அங்கித் திவாரியின் லஞ்ச வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய அமலாக்கத்துறையின் ரிட் மனு மீதான விசாரணை ஜூலை 18-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனுவை, அத்துடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கோரப்பட்டது. அதேபோன்று, அங்கித் திவாரி சார்பில், விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்