ஆற்றில் குளித்ததால் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு அரியவகை மூளை காய்ச்சல்..? - குலைநடுக்கத்தில் அங்கே குளித்த மற்றவர்கள்

Update: 2024-05-16 08:14 GMT

கேரளாவில் அரியவகை அமீபிக் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளா மாநிலம் மலப்புரம் முன்னியூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் அருகே செல்லும் கடலுண்டி ஆற்றில் குளித்துள்ளார். சில நாட்களில் சிறுமிக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததால் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு அரியவகை அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். அவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கும் அதே வைரஸ் அறிகுறி தென்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலப்புரம் கடலுண்டி ஆற்றில் இருந்து இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அந்த ஆற்றில் குளித்தவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்