"அரசு பள்ளிகளில் 1800 முதுகலை ஆசிரியர்கள் பணிநியமன கலந்தாய்வு" - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளிகளில் புதிதாக ஆயிரத்து 800 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-02-05 21:45 GMT
அரசு பள்ளிகளில் புதிதாக ஆயிரத்து 800 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் பணி நியமன கலந்தாய்வு, மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என்று கூறியுள்ளது. ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற அனைவரும் அவரவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்