சட்ட விரோதமாக பேனர் வைத்த‌ விவகாரம் : திமுக, அதிமுக தவிர பிற கட்சிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

சட்ட விரோதமாக பேனர் வைத்த‌தாக எழுந்த குற்றச்சாட்டில் அதிமுக , திமுகவை தவிர மற்ற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத‌து ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-01-27 13:46 GMT
சட்ட விரோதமாக பேனர் வைத்த‌தாக எழுந்த குற்றச்சாட்டில் அதிமுக , திமுகவை தவிர மற்ற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத‌து ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்ட விரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பேனர் விழுந்து சுபஸ்ரீ  பலியானது உள்ளிட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சட்ட விதிகளை பின்பற்றி பேனர்கள் வைப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால், மாநகராட்சி துணை ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்