தேசிய கொடி காட்டினால் நாட்டின் பெயர் கூறும் யுகேஜி மாணவன் : ராஜகபோடாசனம் செய்து காட்டிய 5ம் வகுப்பு மாணவி - இருவருக்கும் உலக சாதனை விருது

தேசிய கொடிகளை காட்டினால் 193 நாடுகளின் பெயரை கூறும் யுகேஜி மாணவன் மற்றும் யோகாவில் ராஜகபோடாசனம் செய்து அசத்திய ஐந்தாம் வகுப்பு மாணவி ஆகிய இருவருக்கும் ஆன்லைன் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.

Update: 2019-12-28 23:27 GMT
சிதம்பரம் விரபத்திரசாமி கோவில் தெருவில், ஆன்லைன் வேல்டு ரெக்கார்ட் நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கான சாதனை  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் மற்றும் சுகன்யா தம்பதியினரின் மகன் ஹரி சரண் பங்கேற்றான். புதுச்சேரியில் உள்ள பள்ளியில் யுகேஜி படிக்கும் ஹரி சரண், தேசிய கொடியை காண்பித்தால், 193 நாடுகளின் பெயர் மற்றும் தலைநகரங்களை சொல்லி அசத்தினான். இதேப்போல மஸ்கட்டில் வசித்து வரும் ஜெயக்குமார் - அனுராதா தம்பதியினரின் மகள் ரீவைஸ்னவி. இவர் மஸ்கட்டில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில், 6 நிமிடம் 58 வினாடிகளுக்கு யோக கலையில் ராஜகபோடாசனம் செய்து சாதனை படைத்தார். இதையடுத்து ஹரி சரண் மற்றும் ரீவைஸ்னவிக்கு ஆன்லைன் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் உலக சாதனை விருதுக்கான சான்றிதழ்  வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்