பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு முறையீடு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2019-11-22 09:00 GMT
தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நவம்பர் 25ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் எப்படி இந்த வழக்கை விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். வரும் 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து  விசாரணை நடத்தினால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகுங்கள் என்று தெரிவித்தனர். டிசம்பர் 2 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25-ஆம் தேதியோ அல்லது 26 ஆம் தேதியே இந்த வழக்கை விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்