அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி : 2,400 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

2 ஆயிரத்து 400 உதவி பேராசிரியர் பணிக்கு இதுவரை 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-10-30 10:32 GMT
2 ஆயிரத்து 400 உதவி பேராசிரியர் பணிக்கு இதுவரை 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 400 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஐந்தாயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 35 ஆயிரம் பேர் இணையதளத்தில் பதிவு செய்து வருவதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், இந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. போட்டித் தேர்வு எதுவுமின்றி , பணி அனுபவம், கல்வித் தகுதி அடிப்படையில், 34 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு, அதிகபட்ச மதிப்பெண் எடுப்பவர்களுக்கு உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்