மின்சார பேருந்து இன்று முதல் சோதனை ஓட்டம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் முதன்முறையாக மின்சார பேருந்து இன்று முதல் சோதனை ஓட்ட முறையில் இயக்கப்பட உள்ளது.

Update: 2019-08-26 02:46 GMT
சென்னையில் முதன்முறையாக மின்சார பேருந்து இன்று முதல் சோதனை ஓட்ட முறையில் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட உள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன. சோதனை ஓட்ட முறையில் 2 பேருந்துகளை சென்னையில் இயக்க முடிவு செய்த தமிழக அரசு, உடனடியாக வாங்கி அவற்றை இயக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி, 2 புதிய மின்சார பேருந்துகளில் ஒரு பேருந்து தயாராகி உள்ளது. சென்னையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் அந்த பேருந்து இயக்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கும் விழாவில் இந்த புதிய பேருந்தை தொடங்கி வைக்கிறார். இந்த மின்சார பேருந்துகளை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம் என்றும், 54 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்