காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Update: 2019-07-18 21:07 GMT
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க செல்லும் மக்களுக்கு, தற்காலிக நிழற்கூடம், மின்விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட  தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக கூறினார். ராஜகோபுரம் அருகே பிரமாண்டமான பந்தல், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு தனி சிறப்பு வழி என அனைத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இதுவரை 23 லட்சத்து 70 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாகவும் கூறினார், நூற்றுக்கணக்கான காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும்  3 ஆயிரத்து 300 காவலர்கள் நாள்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 
போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 சிறப்பு மற்றும் 20 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவதாகவும் அவர் கூறினார். முக்கிய பகுதிகளில்  குடிநீர் ,கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் காஞ்சிபுரம் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  


Tags:    

மேலும் செய்திகள்