மரங்களை நேசிக்கும் மருத்துவர்கள் - 50 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ப்பு

மருத்துவ உபகரணம் குளுக்கோஸ் பாட்டில் என ஏராளமான பொருட்கள் பயன்பாட்டுக்கு பிறகு கழிவுகளாகி விடுகின்றன.

Update: 2019-07-13 20:22 GMT
மருத்துவ உபகரணம்,  குளுக்கோஸ் பாட்டில் என, ஏராளமான பொருட்கள் பயன்பாட்டுக்கு பிறகு, கழிவுகளாகி விடுகின்றன. ஆனால், இவற்றை  பயன்படுத்த நினைத்த மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டனர். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் வேம்பு, மா, புங்கன் மற்றும் பூச்செடிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தாவரங்களை நட்டு வளர்க்கும் இவர்கள், மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி, சொட்டு நீர்  தெளிப்பான் ஏற்படுத்தியுள்ளனர். நாள் முழுதும் தண்ணீர் தெளிக்கும் விதமான அமைப்பை ஏற்படுத்தி, எளிய முறையில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளது பலரது பாராட்டை பெற்றுள்ளது. இதன் மூலம், நேரம் மற்றும் நீர் விரையத்தை மிச்சப்படுத்திய மருத்துவர்கள், சாதனை படைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்