100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.;

Update: 2019-06-19 22:18 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் எதிரே 200 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட பனை மரம் உள்ளது. இந்த பனை மரத்தில் கிளைகள் படர்ந்து, ஒவ்வொரு கிளையிலும் ஒரு மரம் வளர்ந்து உள்ளது. தற்போது 7 தலைமுறைகளைத் தாண்டி இந்த பனை மரம் 100 கிளைகளுடன் பரந்துவிரிந்து நிற்கிறது . கடந்த ஆண்டு பெய்த கடும் மழை, சூறாவளிக் காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தாலும் இந்த பனைமரத்துக்கு சிறு சேதாரமும் ஏற்படவில்லை. இந்த அதிய பனைமரத்தை ஆய்வு செய்யும் பொருட்டு விஞ்ஞானிகள் பலர் இதன் விதைகளை எடுத்துச் சென்று பதியமிட்டனர்.  ஆனால்  விதைகளை எடுத்து சென்று வேறு இடத்தில் நட்டு வைத்தால் அவை வளருவது இல்லை. 7 தலைமுறைகளை கடந்த இந்த பனை மரம் தற்பொழுதும் 100 கிளைகளுக்கு மேலாக கம்பீரத்துடன் காட்சி அளிப்பது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
Tags:    

மேலும் செய்திகள்