பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து அதிகாரிகள் தீவிர சோதனை : அபராதமாக ரூ.13 லட்சம் வசூல்

பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை சுமார் 13 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-06-17 19:11 GMT
பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை சுமார் 13 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாநகராட்சியில் நான்கு மண்டலமாக மூவாயிரத்திற்கு அதிகமான கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 11 ஆயிரம் கிலோவிற்கு மேல் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்