2022க்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே லட்சியம் : தினத்தந்திக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி தகவல்

2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே பாஜக அரசின் லட்சியம் என்று "தினத்தந்தி"-க்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

Update: 2019-06-12 03:00 GMT
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தினத்தந்திக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.உங்கள் நல்வாழ்த்துகளை பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும், மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பா.ஜ.க. அரசு மீது உள்ள நம்பிக்கையால்,முழுத்திறமையோடு பணியாற்ற மேலும் ஒரு வாய்ப்பை  130 கோடி இந்திய மக்கள் கொடுத்து ஆசி வழங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.மக்களுக்கு நிறைய செய்ய வேண்டி இருப்பதை தாங்கள் உணர்வதாகவும், தங்களின் கனவான, அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம், அனைவரின் நம்பிக்கையையும் பெறுவோம் என்பதை உறுதிப்படுத்த பல முனைகளில் பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.2022-ஆம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியருக்கும்வீடுஎன்றலட்சியத்தைகொண்டுள்ளதாகவும்,விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடையவும், உலகில் நம் இளைஞர்கள் புதிய தொழில் புரிந்து உயரிய இலக்கை அடைய செய்வதற்கும் தனது அரசு வேகமாக பணியாற்றுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.இன்று எடுக்கும் முயற்சிகளெல்லாம் வளமான எதிர்காலத்துக்கான விதைகள்தான் என்றும்,வளர்ச்சி என்பது மக்கள் இயக்கம் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.மக்களின் பங்களிப்போடு உயரிய இடத்தை நாடு அடையவும், வலுவான, வளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்கவும் தங்களது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்