EDக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த முக்கிய அட்வைஸ்

Update: 2024-05-06 13:46 GMT

மணல் குவாரி விவகாரத்தில் விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர்களை தேவையின்றி காக்க வைக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில், நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்து மணல் அள்ளி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு ஆஜரான ஆட்சியர்களை காலை முதல் இரவு வரை காக்க வைத்ததாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. அதேநேரம், சம்மனில் கேட்ட ஆவணங்களை ஆட்சியர்கள் கொண்டு வராததாகவும், இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆட்சியர்களை தேவையின்றி காக்க வைக்கக்கூடாது என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலைக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்