நீட் மாணவர்கள் தலையில் இறங்கிய இடி.. நடந்தது என்ன?.. NTA கொடுத்த விளக்கம்

Update: 2024-05-06 13:41 GMT

நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள், எந்த விதமான முகாந்திரமும் இல்லாத அடிப்படை ஆதாரமற்றது என, தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.

ஒவ்வொரு வினாத்தாலும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்ட பிறகு சிசிடிவி கண்காணிப்பின் கீழ் உள்ள தேர்வு அறைக்குள் வெளியில் இருந்து யாரும் நுழைவதற்கு அனுமதி இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மட்டும் தேர்வு முடிவடைவதற்கு முன்பாகவே சில மாணவர்கள் வலுக்கட்டாயமாக வினாத்தாள்களை எடுத்துக் கொண்டதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த வினாத்தாளின் புகைப்படங்களை வினாத்தாள் கசிந்து விட்டதாக தொடர்புபடுத்துவது தவறானது என குறிப்பிட்டுள்ளது.

தேர்வு தொடங்கப்பட்ட பிறகு எந்த ஒரு வெளி நபரோ அல்லது முகமையொ தேர்வு மையங்களை அணுகுவதற்கு எந்த வழியும் இல்லை என தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, சமூக ஊடகங்களில் வெளியான வினாத்தாள் புகைப்படங்களுக்கும் உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் தாள்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்வும் விளக்கம் அளித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்டவர்கள், எவ்வித வதந்திகளுக்கும் காது கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்