திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா? என விசாரணை

திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-05-16 18:44 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்துவந்தவர் கவுதமன்.இவரது அண்ணன் கோவர்த்தன‌ன் அதிமுக நகர மாணவரணி தலைவராக உள்ளார்.இந்த நிலையில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கவுதமன் அவரது தந்தை ராஜூ, தாய் கலைச்செல்வி ஆகியோர் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.வீட்டில் இருந்த ஏசி இயந்திரம் வெடித்து அதனால் ஏற்பட்ட தீ விபத்தால் மூவரும் இறந்த‌தாக கூறப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் ,கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் சோதனையிட்டபோது, மண்ணென்னை கேன் உள்பட சில தடயங்கள் சிக்கியுள்ளன.இதனால் மூவரும் தீயிட்டு கொளுத்தப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் அதே வீட்டில் தங்கியிருந்த கோவர்த்தன‌ன் எந்த காயமும் இன்றி தப்பியதும், தந்தை ராஜி வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த‌தும் போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.இதையடுத்து சம்பவம் நடந்த வீட்டை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளார்.பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்காக காத்திருக்கும் திண்டிவனம் போலீசார், அதன் பின் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதனால், திண்டிவனம் ஏசி வெடி விபத்து சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்