அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் - சரத்குமார்

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

Update: 2019-03-26 08:43 GMT
அதிமுக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த சரத்குமார், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, அதற்கான ஒப்பந்த கடிதத்தை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தனித்துப்போட்டி என்ற நிலையில் இருந்து மாறி, அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்