தேர்தல் விதிகள் அமல் : பேனர்கள் அகற்றம்

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், மற்றும் பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-03-11 11:29 GMT
திருச்சி விமானநிலையம், அருகே, சுவரில் இருந்த விளம்பரங்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் 48 மணி நேரத்தில் அனைத்தும் அகற்றப்பட்டு விடும் என்றார். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுவர்களிலும் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து, பேனர்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதே போல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. இதே போல், திமுக தலைவர் ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டிகள், அரசியல் தொடர்பான போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்